2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

உள்ளாடைகளைத் திருடியவருக்குத் தாக்குதல்

Princiya Dixci   / 2017 ஜனவரி 02 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் 38 வயதுடைய ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இன்று (02) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி நபர், பல மாதங்களாகப் பெண்களின் உள்ளாடைகளைத்  திருடி வருவதாகத் தெரியவந்தது.

இந்நிலையில், மேற்படி நபர்  வீடொன்றுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.  

இதை அவதானித்த அவ்வீட்டு உரிமையாளர், மேற்படி நபரை துரத்திச்சென்று உள்ளாடைகள் சிலவற்றை மீட்டதுடன், மேற்படி நபரையும் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X