Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. முள்ளிப்பொத்தானை 95ஆம் கட்டையில் கல்லடிப் பாலத்துக்கு அருகில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் முச்சக்கரவண்டிச் சாரதியே படுகாயமடைந்த நிலையில், அவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
3 hours ago