Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதகம பகுதியில் ஐந்நூறு மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அக்போபுர பகுதியைச் சேர்ந்த24 வயதுடைய ஒருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர், நண்பர் ஒருவருக்கு கஞ்சாவை வழங்குவதற்கு கொண்டு சென்ற போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்நூறு கிராம் கஞ்சாவை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு கஞ்சா வழக்கொன்றும் நடைபெற்று வருவதாகவும் குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை (18) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago