2025 மே 07, புதன்கிழமை

கண்டன ஆர்ப்பாட்டமும் பாடசாலை பகிஸ்கரிப்பும்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 03:33 - 1     - {{hitsCtrl.values.hits}}

 பொன் ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்பாக இன்று (25) காலை 7 மணியளவில் பெற்றோர், நலன்விரும்பிகள் ஒன்றுத் திரண்டு ஆர்பாட்டமொன்றை நடத்தினர்.
பாடசாலை நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்காத ஒரு சில ஆசிரியர்களின் நடத்தையைக் கண்டித்தும் அவர்களால் பாடசாலை மத்தியில் ஏற்பட்ட சீரற்ற சூழலைக்கண்டித்தும் இந்த ஆர்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதுவரையில், சேலை அணிந்து வந்த ஆசிரியைகள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையை அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை, குறித்த ஆசிரியைகளின் கணவர்கள் மிரட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது பாடசாலை, நாகரீகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 1

  • kumar Friday, 27 April 2018 03:51 AM

    ஐயா! இங்கே சொல்லப்பட்டதும் உங்கள் தனிப்பட்ட கருத்துதான். ஒரு நிருபர் எழுதும் கருத்து!!! உங்கள் கட்டுரையில் சிறிய திருத்தும், அங்கே இருந்தே Banners சொல்லிவிட்டது உண்மையான protest க்கான காரணத்தை!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X