Editorial / 2018 மே 03 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காக்காமுனை, மேல்திடல் வீதியைப் புனரமைத்துத் தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காக்காமுனை, மயில்த்தீவு , மேல்திடல் பகுதியிலுள்ள மக்கள் வைத்தியசாலை, பொதுச்சந்தை, பாடசாலை, அலுவலகங்கள் செல்ல இந்த வீதியையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எனினும், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இவ்வீதி இவ்வாறு சேதமடைந்து, கவனிப்பாரற்று இருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
காக்காமுனை சந்தியிலிருந்து மயில்த்தீவு வரையான ஒரு கிலோமீற்றர் வரையான வீதி, இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது. சிறிய மழை தூரினாலும் வீதியில் நீர் தேங்கி நிற்பதைக் காணலாம்.
அத்துடன், இவ்வீதியில் சாதாரணமாக துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கரவண்டிகள் கூட பயணிக்க முடியாத நிலை காணப்படுவதுடன், வெளிப்பிரதேசங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கஷ்டத்துக்கு மத்தியில் பயணம் செய்கின்றார்கள்.
இவ்வீதி, கிண்ணியா பிரதேச சபை தவிசாளரின் கே.எம்.நிஹாரின் வட்டாரத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் அமையப் பெற்றுள்ளது. எனவே, தவிசாளர் கவனம் செலுத்தி, அவ்வீதியைப் புனரமைத்துத் தர வேண்டுமென, எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago