2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘காணிகள் விரைவில் கையளிக்கப்படும்’

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 01 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2006ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தோப்பூர் - 10 வீட்டுத்திட்ட காணிகள், மிக விரைவில் உரிய காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

குறித்த காணி உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குமிடையிலான கலந்துரையாடல், தோப்பூர் றோயல் வித்தியாலயத்தில் இன்று (01) இடம்பெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, பிரதமருக்கு, எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டுமாக இருந்தால் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென பிரதமரிடம் கட்சி கோரி இருந்தது” என்று தெரிவித்த அவர், “அதில் தோப்பூர் 10 வீட்டுத்திட்ட காணி விடுவிப்பும் ஒன்றாகும்” என்றார்.

அத்துடன், இந்த 10 வீட்டுத்திட்ட காணி விடுவிப்புத் தொடர்பில் மாவட்ட இராணுவ அதிகாரிகளோடு சில தினங்களுக்கு முன்பு தான் கலந்துரையாடியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

விரைவில் இந்த காணி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமெனவும் இந்த 10 வீட்டுத்திட்ட இராணுவ முகாம், இக்பால் நகர் என்கின்ற இடத்துக்கு மாற்றப்படுவதற்கான கட்டுமாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ அதிகாரிகள் தன்னிடம் வாக்களித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்தக் காணிகள், பெரும்பாலும் செப்டெம்பர் மாதத்துக்கிடையில் விடுவிக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.தாணீஸ், காணி உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X