2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜூன் 26 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குச்சவெளிப் பிரதேசத்தில் காணி அற்றவர்களுக்குக் காணிகளை வழங்குவதுடன், காணிகளில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு, அக்காணிக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்பக்குழுவின் இணைத்தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

“பல தடவைகள் இப்பிரச்சினை பேசப்பட்டு வருகின்ற போதும் இவ்விடயம் தொடர்பாக தகுந்த நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளாதுள்ளமை அவதானிக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று (25) காலை இடம்பெற்ற குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கூட்டத்தில், இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதாவது, விவசாயிகளும் மீனவர்களும் எதிர்கொள்ளும் இன்னல்கள்; விவசாய நிலங்களுக்கு, பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வீதிகள் புனரமைக்கப்படாமை; சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் பாதிப்புகள் காட்டு யானை, கட்டாக்காலி மாடுகள் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளிட்டவை ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X