அப்துல்சலாம் யாசீம் / 2018 மே 29 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலியைக் காணச்சென்ற இராணுவ வீரர் ஒருவரை, பிரேதசவாசிகள் மடக்கிப்பிடித்து, நையப்புடைந்து, பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று, திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ - மஹாமாயபுர பகுதியில், இன்று (29) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், எலயாபத்துவ, மான்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இராணுவவீரர் ஒருவரே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதில், படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தொலைபேசி மூலம் காதல் கொண்ட பெண் ஒருவருடைய வீட்டுக்குச் சென்ற குறித்த இராணுவ வீரரை, அப்பெண்ணின் கணவன் மறைந்திருந்து அயலவர்களின் உதவியுடன், மடக்கிப் பிடித்து, நையப்புடைத்து, மரத்தில் கட்டிவைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026