Princiya Dixci / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட் , ஏ.ஆர்.எம்.றிபாஸ்
உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வருடாந்த சிறு கைத்தொழிற் சந்தைக் கண்காட்சியும் விற்பனையும், கிண்ணியா பிரதேச செயலகத்தால், பிரதேச வளாகத்தில் நேற்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் நடத்தப்படுகிற இந்த சந்தைக் கண்காட்சியை, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், சிறு கைத்தொழில் மூலமான உற்பத்தித் திறனை அதிகரித்து, அதன்மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கிண்ணியா பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

34 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago
3 hours ago