Editorial / 2018 மே 18 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}




எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப்பற்று வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வாழைச்சேனை கிண்ணையடியில், இன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி, கிண்ணையடி ஆற்றங்கரை முற்றத்தில் பிதிர்க்கடன் செலுத்தப்பட்டு ஆற்றில் பிண்டங்கள் கரைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கிண்ணையடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.நந்தகுமார் சர்மாவினால், விசேட பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்த ஆலய முன்றலில் தீபச்சுடர் ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன், கி.சேயோன் மற்றும் கோறளைப்பற்று வாழ் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .