Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூன் 23 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கத்துக்குமிடையில் சந்திப்பொன்று, ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை கூடிய விரைவில் புணரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இவ்வீதியைத் திருத்தித்தருவதாகக் கூறி சில வேலைகளைச் செய்தார்கள் எனவும் அவ்வீதியை இன்னும் புனரமைக்க வில்லையெனவும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர், அவ்வீதியை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளருக்கும் பணிப்பாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago