ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜூலை 04 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பிரதேசத்தில் 1 கிலோ 600 கிராம் நிறையுடைய மான் இறைச்சியைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (04) உத்தரவிட்டார்.
மான் இறைச்சியுடன், திருகோணமலை வன வள பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த நரப் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதேவேளை, பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப்புவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026