எப். முபாரக் / 2018 ஜூன் 30 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞனொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று (29) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது கந்தளாய், வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்தசமீர பிரசாத் (வயது 23) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
47 minute ago
51 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
5 hours ago
9 hours ago