2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் சென்றவர் விடுவிப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 06 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மொறவெவ பிரதேசத்தில், முச்சக்கரவண்டியில் கேரள கஞ்சாக் கட்டொன்றை கொண்டு சென்ற 17 வயதுடைய​ பிக்கு ஒருவர், மொறவெவ பொலிஸாரால் இன்று (06) காலை கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஹொரவபொத்தானை முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பயணித்துக்கொண்டிருந்த போது, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்​டிருந்த பொலிஸார்,முச்சக்கரவண்டியை நிறுத்திச் சோதனையிட்ட போது, குறித்த பிக்குவிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரின் சிரேஷ்ட பௌத்த பிக்குவை வரவழைத்து, எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X