2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 03 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.சமீர லக்மால் (38 வயது) என்பவருக்கே, இவ்வாறு இன்று (03) மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.  

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதியே, இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை ​தாக்கல் செய்யப்பட்டு, திரு​கோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையிலேயே, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X