Princiya Dixci / 2017 மார்ச் 01 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் டெங்குக் காச்சலினால் மாணவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருவதால், மாற்று நடவடிக்கை குறித்து ஆய்வதற்காக அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பாட சாலை அபிபிருத்திச் சங்க உறுப்பினர்களுடனான அவசர கூட்டம், நாளை (2) நடத்துவதற்கு வலயக் கல்வி அலுவலகம் தீர்மானித்துள்ளது.
அண்மைக் காலமாக கிண்ணியாவில் பரவி வருகின்ற டெங்குத் தாக்கத்தைக் கட்டுப் படுத்தும் வரை கிண்ணியா வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மகருப் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியாவில் மாணர்வகள் இருவர் உட்பட இதுவரை 3 பேர் இந்த டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.
400க்கும் அதிகமானவர்கள் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாகி கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 minute ago
18 minute ago
21 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
21 minute ago
23 minute ago