Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தலாய் பகுதியில் ஒரு கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தலாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று (4) உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் இருவரும், கந்தலாய் பிரதேசத்தைச் சேர்ந்த, 43 மற்றும் 32 வயதுடையவர்களென, கந்தலாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, 1 கிலோகிராம் கஞ்சாவுடன் நேற்று அதிகாலை சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago