2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத நடவடிக்கைகள்; இருவர் கைது

Editorial   / 2018 மே 02 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா, காக்காமுனைப் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர், நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா கலந்த மதன மோதக லேகியங்களை விற்பனைக்கு வைத்திருந்த காக்காமுனை 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 38 வயது நபர் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவரிடமிருந்து 2 கிலோ 400 கிராம்  கஞ்சா கலந்த மதன மோதக லேகியம்  மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காக்காமுனைப் பகுதியிலிருந்து உழவு இயந்திரத்தில் அனுமதிப்பத்திரமின்றி  கிண்ணியாவுக்கு  மணல் ஏற்றி வந்த சாரதி  ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும் மணலும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X