2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜூன் 11 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

திருகோணமலை சேருவில பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மணல் ஏற்றிச் சென்ற இருவருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை(10) உத்தரவிட்டார்.                                

சேருநுவர, கல்லாறு பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 26 வயதுடைய இருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.                          

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மகாவலி கங்கையாற்றில் உழவு இயந்திரத்திரத்தில் கல்லாறு பகுதிக்குச் அனுமதிப்பத்திரமின்றி ஆற்றுமணல் கொண்டு சென்ற போதே  போக்குவரத்து பொலிஸாரால் வெள்ளிக்கிழைமை(10) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X