Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூலை 05 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
மாகாண தொகுதி எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் சிறுபான்மையினருக்கு பாதிப்பாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என பிரபல சமூக ஆர்வாளர் றுஸ்வின் மொஹமட் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை (06) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
மாகாண சபைத் தேர்தல் புதிய முறையில் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. இருந்தாலும் புதிய முறையில் நடத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில், மாகாண தொகுதி எல்லை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை (06) நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் இம்முறைமை பாதிப்பாக அமைந்துள்ளது. எனவே, நாளைய விவாதத்தில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் என்பன இந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு அதனை நிராகரிக்க வேண்டும். அதேவேளை, இவ்விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago