வடமலை ராஜ்குமார் / 2018 ஜூன் 28 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகரத்தின் கடற்கரை, சவுக்குத் தோப்புப் பகுதியில் தொல்பொருள் திணைக்கத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணி, பராமரிப்பற்று, குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும் இதனால் கடற்கரையின் அழகு பாதிப்படைவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடற்கரைப் பகுதியில் உள்ள இக்காணி, சுற்றி அடைக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிரதேசமாகவுள்ளமையால் இப்பகுதியில் துப்பரவுகளை மேற்கொள்ள முடியாத நிலை நகரசபைக்குக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையில் தற்போது டெங்கு தொற்று அதிகரித்து வருவதால் இவ்வாறான இடங்களை சுத்தமாகப் பராமறிக்க, சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, பொதுமக்கள் கோருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .