தீஷான் அஹமட் / 2018 ஜூலை 30 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மொறவெவ, மிரிஸ்வெவ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் (28) சொட்கன் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதுடன், (வயது 43) சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த, வீட்டில் சொட்கன் துப்பாக்கியொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், அவ்வீட்டை சோதனைக்குட்படுத்திய போதே, துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .