2025 மே 15, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: இருவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட  14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட  இரண்டு சந்தேகநபர்களையும், மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான்  எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (28)  உத்தவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெரியப்பா (வயது 55) மற்றும் அப்பகுதியைச் சேர்நத 54 வயதான இன்னொரு நபருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தையும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தாய் மரணித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சிறுமி உறவினொருவரின் வீட்டில் இருந்தத போதே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .