2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

குச்சவெளி காட்டுப்பகுதியில் ரி -56ரக துப்பாக்கி ரவைகள் நான்கு மற்றும்  3 கிலோ 800 கிராம் பன்றி இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் (வயது 34)  திங்கட்கிழமை (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தி, இந்தச் சந்தேக நபர் காட்டில் மிருகங்களை வேட்டையாடி வருவதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மேற்படி காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய விசேட அதிரடிப்படையினர், சந்தேக நபரைக் கைதுசெய்து   கோமரங்கடவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X