Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Gavitha / 2017 மார்ச் 25 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலையில் டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்பாட்டில் போது, நேற்று (24) வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, திருகோணமலை நீதவான் நீதி மன்ற தீர்ப்பின் படி, ஏழு பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதோடு, இருவருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கிரீன்வீதியில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த 20ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கண்டு பிடிக்கப்பட்ட டெங்கு நுளம்பு குடம்பிகள் இருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராகவே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்று, ழக்கு மாகாண பொது சுகாதார போதனா ஆசிரியர் சபாபதி.சந்திரகுமார் தெரிவித்தார்.
அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்
கிழக்கு மாகாண சகாதார பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய, பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் செல்வராஜா உதயகுமாரினால், குற்றவியல் சட்டக் கோவையின் 262ஆம் பிரிவுக்கமைய, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago