Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத். .
டெங்குக் காய்ச்சல் காரணமாக கிண்ணியா, குறிஞ்சாங்கேணியைச் பொலிஸ் கான்ஸ்டபிளான அபூ ஹனீபா நயீம் (வயது 44) என்பவர் இன்று(18) காலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த 13ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியமை தெரியவந்துள்ளது. இந்நிலையில், இவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டியமையால்; நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, வழியில் உயிரிழந்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் 17 பேர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
3 hours ago