Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
புல்மோட்டைக் கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட கடலாமைக் குஞ்சுகள் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அவை பொலிஸாரின் உதவியுடன் கடலில் விடப்பட்டுள்ளன.
கடற்கரையில் இன்று (23) கடலாமைக் குஞ்சுகள் தத்தளிப்பதைக் கண்ட மீனவர்கள், அது தொடர்பில் பொலிஸாருக்கும்
கடற்றொழில் அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கினர்.
இந்நிலையில், உரிய இடத்துக்குச் சென்று பாத்திரத்தில் ஆமைகளைச் சேகரித்து ஆழ்கடலில் விடப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .