Freelancer / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து இன்று (13) சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.
உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பேத்தியார் மயக்க நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago