Thipaan / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
2017 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழி தினப் போட்டிகளுக்கான திகதிகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், நேற்று (13) அறிவித்தது.
இதன் பிரகாரம், பாடசாலை மட்டத்தில் அனைத்து போட்டிகளும் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னரும் வலயமட்டத்தின் அனைத்துப் போட்டிகளும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னரும் நடைபெற வேண்டும்.
இதேவேளை, மாவட்ட மட்ட எழுத்தாக்கப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும். கடந்த வருடம் போல் மாவட்ட மட்ட எழுத்தாக்கப் போட்டிகளை மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்ட அனைத்துப் போட்டிகளும் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னா் நடாத்தப்படுவதோடு, மாகாண நிலை எழுத்தாக்கப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
எழுத்தாக்கம் தவிர்ந்த ஏனைய மாகாண நிலை போட்டிகள் மே 20, 21 ஆம் திகதிளில் நடைபெறும். மே மாதம் 20 ஆம் திகதி போட்டி இலக்கம் 15 வாசிப்பு தொடக்கம் போட்டி இலக்கம் 28 இசையும் வரையான 14 போட்டிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மே மாதம் 21 ஆம் திகதி போட்டி இலக்கம் 29 இசை தனி தொடக்கம் போட்டி இலக்கம் 46 முஸ்லிம் நிகழ்ச்சி வரையான 18 நிகழ்ச்சிகள் நடைபெறும் இதற்கான இடங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிகக்கப்பட்டுள்ளதுடன், இந்த சுற்றறிக்கைக்கு ஏற்ப கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபா்களும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
10 minute ago
18 minute ago
21 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
21 minute ago
23 minute ago