Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 மார்ச் 28 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஸ்வெவ பகுதியில் காணித் தகராறு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவரைக் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் கூறினர்.
தல்கஸ்வெவ பகுதியிலுள்ள தங்களின் வயல்; காணிகளை துப்புரவு செய்வதற்கு தந்தையும் மகனும் நேற்றுக் (28) வயலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது, அங்கு வந்த அவர்களின் உறவினர்கள் இருவர், அது தமது காணி என்று கூறியுள்ளனர். இந்நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சாந்த சிறிசேன (வயது 54), எஸ்.எஸ்.சுப்புன் (வயது 28) ஆகியோரே வாள்வெட்டுக்கு உள்ளானார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago