2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் த.தே.கூவின் மே தின நிகழ்வு நாளை

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான மே தினக் கூட்டம், திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில், நாளை (01) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதென, இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், எட்டுத் தொழிற்சங்கங்கள் இணைந்து, தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கருத்துகளை முன்வைக்கவுள்ளன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், திருகோணமலை நகர சபைத் தவிசாளர் நா.இராஜநாயகம், பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் டொக்டர் ஞா.ஞானகுணாளன், வெருகல் பிரதேச சபைத் தவிசாளர் க.சுந்தரலிங்கம், மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் துரைநாயகம் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருகோணமலை மாவட்ட ரீதியாகத் தெரிவாகிய 36 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X