Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 07 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை மீனவர்கள், ஏழு கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று ( 07) முதல் நீக்கப்பட்டுள்ளதென, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை, நேற்று முன்தினம் (06) மாலை, இம்ரான் எம்.பி சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட மீனவர்கள், கடற்கரையிலிருந்து ஏழு கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க, மீன்பிடித் திணைக்களத்தால் கடந்த சில ஆண்டுகளாகத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தமது வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு இத்தடையை மீறிய மீனவர்கள், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இம்ரான் எம்.பி, “சிறிய ரக இயந்திரப் படகுகளைக் கொண்டு, ஏழு கிலோமீற்றருக்கு அப்பால், ஆழ்கடலில் கடும் காற்றுக்கு மத்தியில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்வது, உண்மையில் சாத்தியமற்றது. மேலும், இந்த மாவட்ட பூகோள அடிப்படையில், ஏழு கிலோமீற்றர் எனப் பிரிக்கப்பட்டிருந்த எல்லையிலும் பாரிய சிக்கல் காணப்படுகின்றது.
“எனவே, இது தொடர்பான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, மீன்பிடி சங்க உறுப்பினர்களுடன், அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினோம்.
“பிரச்சினைகளை ஆராய்ந்த அமைச்சர், ஏழு கிலோமீற்றர் எல்லைக்குள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள, மூன்று மாத காலத்துக்கு அனுமதி அளித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
இந்த மூன்றுகாலப் பகுதிக்குள், அமைச்சின் அதிகாரிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், துறை சார்ந்தோர் ஆகியோரை அழைத்து, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதற்கும், அமைச்சர் வாக்குறுதி அளித்தாரென, இம்ரான் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
“இந்த காலப்பகுதிக்குள் அமைச்சின் அதிகாரிகள் மீன்பிடி சங்கப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்தோரை அழைத்து கலந்துரையாடி, நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்” என்றார்.
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago