எப். முபாரக் / 2018 மே 14 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கிண்ணியா பகுதியில் திருமணம் முடித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 37 வயதுடைய நபரை, இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (13) உத்தரவிட்டார்.
குறித்த நபர், இரண்டு திருமணங்களை முடித்து, பிள்ளைகள் இருக்கும் நிலையில், சீதனங்களைப் பெற்றுக் கொண்டு, மூன்றாவதாகப் பெண்ணொருவரைத் திருமணம் முடித்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், பெண் வீட்டாருக்கு, குறித்த சந்தேகநபர் ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் முடித்துள்ளமை தெரிய வரவே, கிண்ணியா பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, பொலிஸாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
23 minute ago
29 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
58 minute ago
1 hours ago