Suganthini Ratnam / 2016 ஜனவரி 24 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ரொட்டவெவப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.கே.நஜீம் (வயது 48) என்பவர் அவரது வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டில் சனிக்கிழமை (23) மாலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த தனது கணவர் உறங்கி எழுந்து முகம் கழுவதற்காக வீட்டுக்கு பின்னாலுள்ள தொட்டியடிக்குச் சென்றுள்ளார். கணவர் திரும்பாததை அடுத்து அவரைத் தேடி அங்கு சென்றபோது, தொட்டிக்குள் விழுந்து கிடந்ததை அவதானித்ததாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
அதிகளவான நீர் உட்சென்றிருப்பதே இவரது உயிரிழப்புக்கு காரணமென்று சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
5 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
1 hours ago