2025 ஜூலை 28, திங்கட்கிழமை

துறைமுக வீதியை புனரமைக்க நடவடிக்கை

Thipaan   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். முபாரக் 

திருகோணமலை, மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட துறைமுக வீதியின் 400 மீற்றரை கார்பெட் வீதியாவும் 800 மீற்றரை சாதாரண வீதியாகவும் மாற்றுவதற்கான புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.      

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிரின் இருபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கிட்டில் மூலமே இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.

நீண்ட காலமாக புனரமைக்கப்படாது மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பிரயாணம் மேற்கொண்டு வந்த வீதியினை இணங்கண்டே புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.                  

குறித்த துறைமுக வீதியினை புனரமைப்பதற்கான வேலைகளுக்காக வேண்டு கற்கள் மற்றும் மணல் போன்ற இதர பொருட்களும் இடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X