2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நாரைகளை வேட்டையாடிய இருவர் கைது

எப். முபாரக்   / 2018 ஜூன் 28 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேருவில, சோமாவதி காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெரிய நாரைக் கொக்குகளை வேட்டையாடி, 5 கிலோகிராம் இறைச்சியை வைத்திருந்த இருவரை, நேற்று (27) இரவு கைதுசெய்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கந்தளாய், சேருவில பகுதியைச் சேர்ந்த 34, 46 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X