Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
யுத்தம் காரணமாக, 2006ஆம் ஆண்டு சம்பூரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்பு மூடப்பட்ட சம்பூர் உப தபால் நிலையம் 10 வருடங்களின் பின்பு மீண்டும் வியாழக்கிழமை (09) காலை 10 மணிக்கு சம்பூர் மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலுள்ள கட்டடம் ஒன்றில் உத்தியோக பூர்வமாகத் திறக்கப்படவுள்ளதாக மூதூர் பிரதான தபால் நிலையப் பொறுப்பதிகாரி நல்லதம்பி குமணன் தெரிவித்தார்.
சம்பூர் உப தபால் நிலையம் இதற்கு முன்னர் தற்காலிகமாக மூதூர், கடற்கரைச்சேனை ஆகிய பகுதிகளில் இயங்கி வந்துள்ளது. தற்போது சம்பூரில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்,
இம்மக்களின் தபால் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த உப தபால் நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago