2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பராமரிப்பு பணம் செலுத்தாதவர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய நபர், தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழும் நிலையில், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு பணத்தினை, மாதாந்தம் முறையாக செலுத்தாது தலைமறைவாகி இருந்த நிலையில், இன்று (20) காலை, சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தமக்கான பராமரிப்பு பணத்தினை முறையாக செலுத்தாது இருப்பதாக, அவரது மனைவியினால், சம்பூர் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸார் தேடுதல் நடாத்திய போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், சம்பூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, சம்பூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X