Editorial / 2018 மே 30 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவில் உள்ள கன்னியாவில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவுப் பொலிஸாரால் நேற்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தங்குமிட விடுதியொன்றில், சட்ட விரோதமான முறையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, துவரங்காட்டு சந்தியில் நின்று கொண்டிருந்த இளைஞரொருவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 5 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதென, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, 23 வயதுடைய மேற்படி இளைஞரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியதில், தங்குமிட விடுதியை நடத்தி வந்த பிறிதோர் இளைஞர் சோதனையிடப்பட்டார்.
இதன்போது, 27 வயதுடைய அவ்விளைஞரிடமிருந்து 330 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டனவென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதேவேளை, அவ்வீதியால் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தைச் சோதனையிட்ட போது, அனுமதிப்பத்திரத்திலுள்ள நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் மூவரும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும், உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .