Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் செந்தமான பஸ்ஸொன்றிலிருந்து, கால் தவறிக் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், இளம் தாயொருவரும் அவருடைய 4 வயதுடைய மகளும், இன்று (05) அதிகாலை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா-பைசல் நகர்ப் பகுதியைச் சேர்ந்த எஸ்.பர்ஷானா (24 வயது) மற்றும் பாத்திமா பர்வின் (04 வயது) ஆகியோரே இதன்போது காயமடைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ், தம்பலகாமம் கோவிலடிப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, சிறுமி, செல்லமாக ஓடி விளையாடியதாகவும் அவரைப் பிடிக்க தாய் சென்ற வேளையில் கால் தவறி, இருவரும் கீழே விழுந்துள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்துத் தொடர்பில், தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago