2025 மே 06, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஜூன் 30 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

இத்தியோப்பியா நாட்டிலிருந்து கப்பல் மூலம் வந்த பொதியொன்றை சோதனையிட்ட போது, 16 கிலோ 100 கிராம் நிறையுடைய கெதீன் என்றழைக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில், மட்டக்களப்பு - கல்லடி பகுதியைச்சேர்ந்த பீ.நிஷாந்தன் (36வயது) என்பவர் கைதுசெய்யப்ப்ட்டுள்ளார்.

இத்தியோப்பியா நாட்டிலிருந்து, திருகோணமலைக்கு கப்பல் மூலம் பொதியொன்று வந்துள்ளது.

அப்பொதியை எடுத்துச்செல்வதற்காக வருகை தந்தவரிடம் பொதியில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை சோதயிட உதவி செய்யுமாறும் சுங்க அதிகாரிகள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து சோதனையிட்ட போது, கெதீன் என்றழைக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.  இதையடுத்து, திருகோணமலை பொலிஸாரிடம் போதைப்பொருள்களுடன் சந்தேகநபரை ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X