Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
போதை மாத்திரைகள் 130ஐ தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் கைரேகை அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (12) உத்தரவிட்டார்.
முருகாபுரி, பள்ளத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தனூஷன் (29 வயது) என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அவரது வீட்டை சோதனையிட்ட போது, அவரிடமிருந்து சிவப்பு நிறத்தில் 80 மாத்திரைகளும், வெள்ளை நிறத்தில் 50 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார், நீதவானின் முன்னிலையில் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்ததும் குறிப்பிடத்தக்கது.
47 minute ago
51 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
5 hours ago
9 hours ago