Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-ஹொரவப்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாத நபர்களினால் நேற்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர். வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய் சந்தியிலுள்ள புத்தர் சிலைகளே, இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளனவென பொலிஸார் கூறினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மொறவெவ நகரத்திலிருந்த புத்தர் சிலையை உடைத்துவிட்டுச் செல்லும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவியில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனாலும், மோட்டார் சைக்கிளின் இலக்கமோ அல்லது உடைப்பவர்களையோ இணங்கான முடியாத நிலையில் அந்தக் காட்சி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொறவெவ பிரதேசத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் ஒரே சங்கங்களில் அங்கத்துவம் வகித்தும் நெருங்கிய உறவுகளுடன் வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் இவ்வாறான தீயச் செயற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிப்பதாகவும் மக்கள் குழப்பமடைய தேவையில்லையெனவும் மொறவெவ பிரதேச இளைஞர் கழகங்கள், வேண்டுகோள் விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
33 minute ago
1 hours ago