2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புனரமைக்கப்படாமல் காணப்படும் துவரங்குளம்

Thipaan   / 2016 ஜூன் 25 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவில் அமைந்துள்ள துவரங்குளம் இதுவரை புனரமைக்கப்படாததால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்;.

துவரங்குளத்தை நம்பி சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் விவசாயம், கால்நடை வளர்ப்பையே தமது ஜீவனோபாயத் தொழிலாகச் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இக்குளத்தைச் சுற்றி சுமார் 80 ஏக்கர் வயல் நிலங்கள் உள்ளன. மாரி காலத்தில் மட்டும் வேளாண்மை செய்யப்படுவதுடன், கோடை காலத்தில் விவசாயம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

குளத்தின் நடுவில் மண் அதிகமாக உள்ளதால் நீர் குறைவாகவே தேங்கி நிற்கிறது. இதனால்,  விவசாயம் செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

2004ஆம் ஆண்டு இக்குளத்தின் ஒரு சில பகுதிக்கு குளக்கட்டு உடையாமல் கற்கள் அடுக்கப்பட்டதாகவும் குளங்கள் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் இதுதொடர்பில், தமக்குத் தெரியாது என விவசாயிகள் தெரிவிக்னிறனர்.

இந்தக்குளம், மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிதி அமைச்சின் கீழ் 10 இலட்சம் ரூபாய்  செலவில் 2008 ஒக்டோபர் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டபோதும், இக்குளத்தால் எவ்விதப் பயனும் இல்லை எனக் கூறுகின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X