Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில்; சுமார் 17 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளும் பணமும் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீட்டில் புதன்கிழமை (11) பகல் எவரும் இல்லாத வேளையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வீட்டில் வசிக்கும் தாம்; மாலை வேளையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் யன்னல் ஒன்று உடைக்கப்பட்டிருந்ததையும் நகைகள் திருட்டுப் போயிருந்ததையும் அவதானித்துள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago