Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, எப்.முபாரக்
திருகோணமலை-முதலியார் குளம் பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா நேற்று வெள்ளிக்கிழமை(19)உத்தரவிட்டார்.
திருகோணமலை, முதலியார் குளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சந்தேகபரொருவரை வியாழக்கிழமை (18) மணியளவில் கைது செய்துள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், திருகோணமலை, முதலியார்குளம் பகுதியைச்சேர்ந்த கஹதல ஆராச்சிலாகே சிறிபால மணபந்து (62 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
50 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வருவதாகவும் அப்பெண்ணை, குறித்தநபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
27 minute ago
2 hours ago