2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மனைவியை கொலைசெய்த கணவனுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 மே 06 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, பாலையூற்று பகுதியில் தனது மனைவியின் கழுத்தை கத்தரிக்கோலினால் வெட்டி கொலை செய்த கணவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(05) திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.

பாலையூற்று- முருகன் கோயிலடியைச் சேர்ந்த, நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கழுத்தை கத்தரிக்கோலால் வெட்டிவிட்டு தனது மடியில் மனைவியை வைத்துக்கொண்டிருந்த கணவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற நீதவான், நேரடியாக சென்று வைத்தியசாலையில் சடலத்தைப் பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததனை அடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X