அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூன் 03 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவ்பொத்தானை குளத்திற்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு, மீட்கப்பட்ட சடலம் ஹொரவ்பொத்தானை,மெதவாச்சி சந்தியில் வசித்து வந்த போகுல லியனகே சுமேத பெரேரா (31 வயது) என்பவர், எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை காணவில்லையென, ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 30ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும்,இதேவேளை நேற்று(02) குளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் சடலத்தை உறவினர்களிடம் காண்பித்து உறுதிப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.
சடலத்தை கெப்பித்திகொள்ளாவ பதில் நீதவான் அஐித் புஸ்பகுமார திஸாநாயக்க நேரில் சென்று பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026