2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாணவர்களிடம் பணம் அறவிடத் தடை

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க, தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு, பரிசுகள் வழங்குவதற்கு மாணவர்களிடம் பணம் அறவிடுவதை கல்வியமைச்சு முற்றாகக் தடை செய்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதென, இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், பாடசாலையில் நடைபெறும் ஆசிரியர் தினம், ஆசிரியர் கௌரவிப்பு, பிரியாவிடை வைபவம் போன்ற நிகழ்வுகளுக்குப் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பது, அதற்காக குழுக்களை நியமிப்பது போன்ற அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான பண அறவீடு, பாடசாலை மாணவர்களிடையேயும் அவர்களது பெற்றோர்களிடையேயும் பல்வேறு மன உளைச்சல்களையும் பொருளாதார சுமை, ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்படுத்தி வருவதுடன் இலவசக் கல்வி கொள்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மாணவர்களிடமிருந்து அதிபர், ஆசிரியர் கௌரவிப்புக்காக பணம் அறிவிடுவது, இலஞ்சம், ஊழல் சட்டத்தின் கீழும் தாபன விதிக் கோவை ஏற்பாடுகளுக்கமைய தண்டனைக்குரிய குற்றமென, மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X