2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மாணவர் விடுதி திறப்பு வி​ழா

Editorial   / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு பல்கலை கழகத்தின், திருகோணமலை வளாகத்தில், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின், தங்கும் வசதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட 04 மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத் தொகுதி, திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (20), இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதியாகக் கலந்து கொண்டு, சம்பிரதாயபூர்வமாக, விடுதியைத் திறந்து வைத்தார்.

சுமார் 400 மாணவர்கள் தங்கியிருந்து, தமது கல்வியை மேற்கொள்வதற்கு வசதியாக, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால், 215 மில்லியன் ரூபாய் செலவில், இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவம், தொடர்பாடல், சித்த வைத்தியத்துறை மற்றும் கணினி, பிரயோக விஞ்ஞானம் ஆகிய துறைகளில், மாணவர்கள் இங்கு தமது கற்கைகளை மேற்கொள்கின்றார்கள். இதேவேளை, கடந்த காலங்களில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், தமக்கு விடுதி வசதி செய்து தருமாறு கோரி, போராட்டங்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக, திருகோணமலை வளாக முதல்வர், கலாநிதி வல்லிபுரம் கனகசிங்கம் உட்பட, பல்கலைக் கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X